தமிழகத்தில் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறும் நிலையில் மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வை  இன்று 20.36 லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று தேர்வு எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான செயல்முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு நடைபெறும் மையத்திற்கு காலை 7:00 மணி முதல் 8 மணிக்குள் செல்ல வேண்டும். ஒருவேளை தாமதமானால் கூட 9 மணி வரை தான் தேர்வு  அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதன் பிறகு 9:00 மணிக்கு OMR விடைத்தாள் வழங்கப்படுவதோடு 9.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதன் பிறகு OMR விடைத்தாளினை பதட்டம் இல்லாமல் நிரப்புவதோடு எக்காரணம் கொண்டும் அதில் whitener பயன்படுத்தக்கூடாது. இந்த விடைத்தாளில் தேர்வு எழுதுபவரின் கையொப்பம், கைரேகை, அரை கண்காணிப்பாளர் கையொப்பம் போன்றவைகள் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் தேர்வு எழுத செல்பவர்கள் நுழைவு சீட்டு, கருப்பு நிற பந்து முனை பேனா, அடையாள அட்டை ஆகியவற்றை மறக்காமல் கொண்டு செல்வதோடு டிஜிட்டல் கடிகாரம் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.