பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, அறிவுசார் பொருளாதாரம் உட்பட 7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின் கீழ் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில்  உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹1,245 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023-24 பட்ஜெட்: ₹6,967 கோடி 2024-25 பட்ஜெட்: ₹8,212 கோடி