திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் எனப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மலையை சிவனாக வழிபடுவதால் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை எனும் மலையை பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வணங்குவார்கள். இந்நிலையில் இன்று ஆனி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்லும் நாளாகும்.

எனவே இன்று எந்த நேரத்தில் கிரிவலத்தை தொடங்க வேண்டும் என்பது குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 7.42 மணி தொடங்கி நாளை மாலை 5:46 மணிக்கு கிரிவலம் நிறைவடைகிறது என கோவில் நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று திருவண்ணாமலைக்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு இருக்கிறது.