கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. முன்னதாக கோவில் தனியாரிடமிருந்தபோது தெற்கு பாகத்தில் இருந்த சிறிய நீராளி குளம் பராமரிப்பு இல்லாமல் மண் நிரம்பி முடி இருந்தது. அதனை அறநிலைத்துறை மூலம் தூர்வாரும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் குளத்தை தூர்வாரிய போது சுமார் 2 அடி உயரமுள்ள கல்லால் ஆன விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குளம் பயன்பாட்டில் இருந்த போது விநாயகர் சிலை கரையில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து அறிந்து ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று விநாயகர் சிலையை வணங்கி சென்றனர்.