உத்தரகாண்ட் மாநிலம் பிலிபிட்டில் உள்ள நெவாரியா கிராமத்தில், 33 வயதான விவசாயி தாரா சிங், குறுக்கு வழியான பரத்பூர் வனப்பகுதி வழியாக தனது வீட்டிற்கு செல்லும் போது புலியால் கொல்லப்பட்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அடுத்த நாள் காலை வழிப்போக்கர்கள் பார்க்கும் வரை அவரது உடல் ஒரே இரவில் கண்டுபிடிக்கப்படாமல் கிடந்தது.

ஆரம்பத்தில், வனத்துறை புலி தாக்குதலை மறுத்தது, ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள் தாரா சிங்கின் கழுத்தில் நக அடையாளங்கள் இருப்பதை வெளிப்படுத்தி, அது புலி தாக்குதல் என உறுதி செய்யப்பட்டது. பரத்பூர் வனப்பகுதியில் இது  நான்காவது சம்பவம் ஆகும்.

வனப்பகுதி கிராமத்திற்கு அருகாமையில் இருப்பதால், புலிகள் அடிக்கடி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்குவதும் , அச்சுறுத்துவதுமென இருப்பதால்,  வனத்துறை அதிகாரிகளிடம் கம்பி வேலி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், பதில் கிடைக்கவில்லை. தற்போது, அப்பகுதியில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளது, மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.