இந்தியாவில் தமிழகம் உட்பட  பல மாநிலங்களிலும் தகுதி தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் விதமாக ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சில நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டாலும் தரமான பயிற்சியை வழங்குகிறார்கள். இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறித்து விடுகின்றனர். அதனைப் போலவே கேரளாவை சேர்ந்த மாணவரிடம் ஆன்லைன் வகுப்புக்கான அனைத்து கட்டணத்தையும் வசூல் செய்து விட்டு முறையாக பயிற்சி வழங்கவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் மாணவனை கூடுதலாக இரண்டு பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் படியும் வற்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாணவனுக்கு சரியாக பயிற்சி வழங்காத காரணத்தால் மாணவன் செலுத்திய கட்டணத்தை நிறுவனம் திருப்பி வழங்க வேண்டும் என்றும் மாணவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் கூடுதலாக 60 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.