இந்தியாவில் வருமான வரி துறையினரால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வருமான வரி செலுத்துவதற்கும், பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளுக்கும் உதவுகிறது. இந்த பான் கார்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனி எண்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பான் கார்டு மூலம் மோசடிகள் நடைபெற்று வருவதால் அதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். நீங்கள் அடிக்கடி உங்கள் பண பரிவர்த்தனைகளை சரிபார்த்துக் கொள்வதோடு சிபில் ஸ்கோரையும் சரிபார்க்க வேண்டும்.

நீங்கள் கிரெடிட் கார்டில் கடன் வாங்கிய பிறகு அதன் பில்லை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு தெரியாமல் ஏதேனும் பண பரிவர்த்தனைகள் நடந்திருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரிவிப்பதோடு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க வேண்டும். இது தவிர வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இப்படி செய்வதன் மூலம் பான் கார்டு மோசடியை தடுப்பதோடு, மோசடி நடந்திருந்தால் அதற்கு நிவாரணமும் பெற முடியும்.