கர்நாடகா தலைநகரான பெங்களூரு பல மணி நேரம் நீடிக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல்களுக்கு புகழ்பெற்றது. எனினும் பெங்களூரு மாநகரம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக மாறியதால் இது தற்போது பல பெரிய நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு தாயகமாக இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான மக்கள் பெங்களூருவுக்கு வருகின்றனர். இதனிடையில் ஒரு பயனர் பகிர்ந்துள்ள படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதாவது, ஒரு பெண் ரேபிடோ பைக்கில் போகும்போது பணிபுரிகிறார். அலுவலகத்துக்கு போகும் வழியில் லாப்டாப்பை பார்த்துக்கொண்டே செல்லும் பெண்ணின் புகைப்படம், கோரமங்களா-அகாரா-வெளிவட்ட சாலையில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது “பெங்களூருவின் பீக் தருணம்” என்று குறிப்பிடப்படும். சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பின் டுவிட்டரில் பதிவிட்ட ஒரு பயனர் “எதிர்கால பெங்களூரு-WFR (சாலையிலிருந்து வேலை)” என்ற மீமையும் பகிர்ந்துள்ளார்.