கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு போலி மருத்துவம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது நதீம் (25) என்ற வாலிபர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அவரின் நண்பரின் சான்றிதழை வைத்து மருந்தகம் நடத்த அனுமதி வாங்கியுள்ளார்.

இவர் மருந்தகம் நடத்தியதோடு அந்த பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையும் வழங்கி வந்துள்ளார். இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன் குமார் (27) என்பவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து பிகாம் படித்து விட்டு கோவிந்தராஜ் (50) என்ற நபரும் தனியார் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவர்கள் 3 பேரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.