என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  1920 ஏப்ரல் 3ஆம் தேதி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் 16 பேரை  சுட்டார்கள். என்ன நடந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆங்கிலேயர்கள் எல்லாத்தையும் அடக்கினார்கள். எல்லாரையும் அடக்கி பார்த்தார்கள்…  மகாராஜாவையும் அடக்கி பார்த்தார்கள்… பெரிய பெரிய படைகள் இருக்கக்கூடிய அரசனை அடக்கி  பார்த்தார். எல்லாத்தையும் அடக்கியாச்சு.

ஆனால் கள்ளர் பரம்பரையை அடக்க முடியவில்லை. 1871ல் குற்றப்பரம்பரை சட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்தியாவில் 213 சமுதாயத்தை குற்றப்பரம்பரை சட்டத்த்தில் பட்டியலிட்டார்கள்.  என்ன கொடுமை தெரியுமா..? ஆண்கள்   தினமும் 6 மணிக்கு காவல் நிலையத்திற்கு போய் ஒரு கைரேகை வைத்துவிட்டு,  இரவு முழுவதுமே காவல் நிலையத்தில் அமர்ந்து விட்டு,  காலையில் கிளம்பி வேலைக்கு போக வேண்டும், இதான் குற்றப்பரம்பரை சட்டம்.

எல்லா ஆண்களுமே சாயங்காலம் ஆறு மணிக்கு காவல் நிலையத்திற்கு போய்,  கை ரேகை வைத்துவிட்டு இரவு காவல் நிலையத்தில் உட்கார்ந்து விட்டு…  காலையில் வேலைக்கு செல்ல வேண்டும். இந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கள்ளர் சமுதாயம் வந்த பிறகு,  ஆங்கிலேயர்கள் இங்கே எல்லாம் தண்டோரா போட்டார்கள். எல்லோரும் ஆறு மணிக்கு காவல் நிலையத்திற்கு வந்துருங்க. அதற்க்கு முன்பு உங்களுடைய கைரேகையை பதிவு செய்ய போகின்றோம், கை  ரேகையை கொடுங்கள் என்று….

நீங்க கைரேகையை அவ்வளவு எளிதா கொடுத்துடுவீங்களா..?  60,000 பேர் இருக்க கூடிய சமுதாயத்தில் வெறும் 3000 பேர் மட்டும் கைரேகை கொடுக்கின்றார்கள்.  57,000 பேர் கைரேகை கொடுக்க முடியாது போடா என்கிறார்கள். அதன் பிறகு ஊர் ஊருக்கும் தண்டோரா   போடுகிறார்கள். பெருங்காமநல்லூருக்கும் வந்து தண்டோரா போடுறான். நீங்கள் சாய்ங்காலத்திற்குள் கைரேகை கொடுக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…. அப்போதும் கொடுக்கவில்லை.

அதன் பிறகு அங்கு இருக்ககூடிய பெரியவர்கள் ஆங்கிலேயரிடம் சொல்லுறாங்க… ஐயா நாங்கள் எல்லாம் விவசாயிகள். நேர்மையாக வாழ்பவர்கள், குலதெய்வ வழிபாட்டில் இருப்பவர்கள், எங்களை குற்றப்பரம்பரை என்று சொல்லி… எங்களுடைய ஊருக்கு வந்து… எங்களுடைய கைரேகையை வாங்கிட்டு போனால்… நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று சொன்ன பிறகு,  ஆங்கிலேயர்கள் இங்கிருந்து போய்,  இன்னொரு உத்தரவு போடுகிறார்கள்.

1920 இல் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி சாயங்காலம் 6 மணிக்குள்ள மதுரையில் இருக்கக்கூடிய ஆங்கிலேய மேஜிஸ்ட்ரேட் முன்பு நீங்கள் ஆஜராகி கைரேகை கொடுக்க வேண்டும் என்று… பெண்கள் எல்லோரும் திரள்கிறார்கள்.  எல்லா பெண்களும் இங்கே வாரங்க. தாய்மார்கள்…  ஏப்ரல் 3ஆம் தேதி காலையில் தாய்மார்கள் சொல்லுகின்றார்…  எந்த காரணத்திற்கும் எங்களுடைய கணவன்மார்களையும்,  குழந்தைகளையும் மதுரைக்கு அனுப்ப மாட்டோம்.

கைரேகை கொடுக்க மாட்டோம்.  அப்படிப்பட்ட வீரம் விளைந்த பரம்பரை இருந்து நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்… ஆங்கிலேயர்கள் படை வருகிறது. நீங்க அவுங்க பேச்சை கேட்கல.. கைரேகையை கொடுக்கல…  என்ன வேணா பண்ணுங்க பாத்துக்குறேங்குறீங்க…  நேரடியாக துப்பாக்கி சூடு நடத்துகின்றார்கள். இந்திய அளவில் இதை தென்னகத்தின் உடைய ஜாலியன் வாலாபாக் என்று சொன்னார்கள். கையில் கத்தி இல்லை… கோடாளி இல்லை… கம்பு இல்லை…  நீராயுதபாணியாக நின்ற சமுதாயத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு,  16 பேர் கொல்லப்படுகின்றார்கள்.

16 பேரையும் கொன்று,  ஒரே மாட்டு வண்டியில் 16 பேரையும்  கொண்டு போய் ஒரே குழியில் புதைக்கிறார்கள். இந்த நேரத்திலே இங்கே வந்துவிட்டு அந்த 16 அற்புதமான மனிதர்களின் பெயரைப் படிக்க வேண்டும் என்பது ? என்னுடைய ஆசை… ஏனென்றால்..?  103 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றைக்கு இளைய தலைமுறை… இளைய சமுதாயம் இங்கு நின்று கொண்டிருக்கிறார்கள்…  அவர்களுக்கு இதை படித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக…  அந்த பதினாறு அற்புதமான மனிதர்களுடைய பெயரை இங்கே கொண்டிருக்கிறேன்.

மாயாண்டி தேவர் ஐயா… குள்ளன் பெரிய கருப்பன் அய்யா…. விருமாண்டி தேவர் ஐயா…. சிவன்காளை  தேவர் ஐயா…. பெரியாண்டி தேவர் ஐயா… உவையன் என்ற முத்துக்கருப்பன் ஐயா… மோளை சின்ன தேவர் ஐயா… மாயாண்டி தேவர் ஐயா… முனியாண்டி என்கின்ற மாயாண்டி தேவர் ஐயா….. உடையார் தேவர் ஐயா… சின்னமாயாதோர்  தேவர் ஐயா…  பெரிய கருப்பர் தேவர் ஐயா… வீரன தேவர் ஐயா… முத்தையா தேவர் ஐயா… வீர தேவர் ஐயா… 16 பேரை கொன்று மாட்டு வண்டியில் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்த குற்றத்திற்காக மாயாக்கால் என்கின்ற பெண்ணையும் குத்தி கொலை செய்கிறார்கள். 17 பேர்.

இன்றைக்கு எப்படி நமக்காக அவர்கள் போரிட்டார்களோ…    நமக்காக அவர்கள் எழுந்து நின்றார்களோ….  என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இந்த மண்ணிளே உரக்க சொன்னார்களோ…  அவர்களுடைய பிள்ளைகளாக நாம் இருக்க வேண்டுமா ? வேண்டாமா ? அப்படிப்பட்ட மனிதர்களுடைய பிள்ளைகளாக நாம் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட வீரத்தை காட்டி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்து தொடுடா  பார்க்கலாம் நிராயுதபாணியாக நின்று இருக்கிறார்கள் என பேசினார்.