தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புதல் அளித்து கையெழுத்திடாத பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு  நிதி கேட்டதாக பாஜக  தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதாவது புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் உள்ளது. இதன் மூலம் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தமிழக அரசு இன்னும் இணையாத நிலையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை  திட்டத்தில் சேர மறுத்த மாநில அரசுகளுக்கு கல்வி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அ

ந்த வகையில் தமிழகத்திற்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் 573 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்திற்கு கல்வி திட்டத்திற்கான 573 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியதாக தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதோடு பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு நிதியை விடுவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்கவில்லை எனவும், இது தொடர்பாக பரவிய செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும் கூறியுள்ளது. மேலும் ஒப்புதல் அளித்து கையெழுத்திடாத பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கான நிதியை கேட்கவில்லை எனவும் “சமக்ரா சிக்ஸா அபியான் திட்டத்திற்கான நிதியை மட்டும் தான் அவர் கேட்டதாகவும் தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளதால் பாஜக வெளியிட்டுள்ள செய்தியில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.