
சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் ஆட்சியின் போது சுமார் ரூபாய் 2000 கோடி மதுபான ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் சமீபத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ்பாகலின் மகன் சைதன்யாவின் வீட்டில் சோதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் கீழ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்று அளித்ததன் அடிப்படையில் அந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவதை அமலாகத் துறை சமீப காலமாக வாடிக்கையாக வைத்துள்ளது. மேலும் அமலாக்க துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் இதனை தொடர்ச்சியாக நாங்கள் பார்க்கிறோம்” என காட்டமாக தெரிவித்தனர்.