
2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் நேற்று நாடாளுமன்றத்தில் செய்யப்பட்டது. 8-வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பீகாரில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து எம்பி கனிமொழி கலாய்த்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் நாடாளுமன்றம் சென்ற இத்தனை ஆண்டுகளில் பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்பது இதுவே முதல் முறை என்று அவர் கூறியிருந்தார்.