கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் குளிர்பானங்களை நாடி வருகின்றனர். அதே சமயம் இளைஞர்களின் கவனம் முழுவதும் கூலிங் பீரை நோக்கி திரும்பி  உள்ளது. அதாவது கோடை காலங்களில் பீர் குடித்தால் உடல் சூடு தணியும் என்பது மது பிரியர்களை நம்பிக்கை. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஜகிடைலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கூடுதல் ஆட்சியர் லதாவிடம் வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் பிராம் ராஜேஷ் என்பவர் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, ஜகிடைலா பகுதியில் கிங்பிஷர் பீர் கிடைப்பதில்லை. தர்மாபுரி, கொருட்லா உட்பட பல்வேறு இடங்களில் பீர் விற்பனை செய்யப்பட்டாலும் தங்கள் பகுதியில் இந்த பீர் கிடைப்பதில்லை. மேலும் சட்டவிரோதமாக மது கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் கிஷர் பீர் தடை இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டார். இது தொடர்பாக கலால் துறை உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.