
பார்சில் நடந்த சியாபரெல்லியின் ஃபேஷன் நிகழ்ச்சியில் பிரபல பாப் பாடகி தோஜா கேட்-ன் உடல் தோற்றம் பார்ப்போரை வியக்கச் செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயதான பிரபல பாப் பாடகி தோஜா கேட் அவரது பாடலுக்கும் அவரது பாடல் வரிகளுக்கும் பெயர் போனவர்.
பாரிசில் நடந்த சியாபரெல்லியின் ஃபேஷன் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் வித்தியாசமாகவும் வியக்கத்தக்க வண்ண ஆடைகளும் அணிந்து வந்த நிலையில் பாப் பாடகி டோஜா கேட் 30,000 படிக கற்களால் உடலை மூடியுள்ளது பார்ப்போரை வியப்படைய செய்துள்ளது. இவர் அவரது உடல் முழுவதும் சிவப்பு நிற வண்ணம் பூசி 30 ஆயிரம் படிகக் கற்களை பதிய வைத்துள்ளார். இந்த அலங்காரம் செய்ய அவரது அணியாளர்களுக்கு ஐந்து மணி நேரம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.