இந்தியா முழுவதும் பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும். இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருது இந்த ஆண்டு 139 பேருக்கு வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்திற்கு 2 பத்ம விருதுகள் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மத்திய அரசுக்கு அதிருப்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பத்ம விருதுகள் தொடர்பாக தெலுங்கானா மாநில மந்திரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை ரேவந்த் ரெட்டி நடத்தியுள்ளார். இதில்  பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அம்மாநில அரசு பரிந்துரை செய்த பிரபலங்களின் பெயர்களை மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை. 139 விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தெலுங்கானா மாநிலத்திற்கு 5 பத்ம விருதுகளை ஆவது அறிவித்திருக்க வேண்டும். ஆனால் 2 நபருக்கு மட்டுமே பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பரிந்துரை செய்த முக்கியமான பிரபலங்களின் பெயர்களை பத்ம விருதுகளுக்கு மத்திய அரசு எடுத்துக் கொள்ளாதது தெலுங்கானா மக்களை அவமானப்படுத்தியது போல் உள்ளது. மேலும் இது தெலுங்கானாக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி ஆகும். இவ்வாறு ரேவந்த் ரெட்டி மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.