மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் மேற்கொள்வது பல நன்மைகளை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?

திருவோணம் நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே விரதத்தை துவங்கி விட வேண்டும். காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாத்திவிட்டு துளசி தீர்த்தத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். விரதத்தின் போது பெருமாள் பாடல்களை பாராயணம் செய்யலாம். மதியம் உப்பு சேர்க்காமல் உணவு உண்டு மாலையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

திருவோண விரதத்தின் நன்மைகள்

திருவோண விரதம் மேற்கொள்வதால் சந்திர தோஷத்தில் இருந்து விடுபடலாம். இனிமையான வாழ்க்கை அமையும். பெருமாளின் அவதாரமான வாமனம் போன்று அழகான மற்றும் அறிவான குழந்தை வரம் கிடைக்கும். செல்வ செழிப்பு அதிகரிக்கும்  இன்றைய திருவோண நட்சத்திர நாளில் விரதம் இருந்து பெருமாளின் அருளை பெறுங்கள்.