
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஹரிசந்தன்பூர் பஜாரில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று காலையில் 4 திருடர்கள் ஹெல்மெட் அணிந்து நகைக்கடக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து நகை கடைக்குள் புகுந்த 4 திருடர்களும் துப்பாக்கியை காட்டி கடையின் உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளரை மிரட்டி அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
Broad Daylight #Robbery at Gunpoint at a Jewellery store in Harichandanpur of Keonjhar district, caught on #CCTV
Wearing helmets 4 armed #Robbers entered the #jewellery store in #Harichandanpur of #Keonjhar dist, #Odisha , immediately pulled out firearms and looted gold… pic.twitter.com/ho2gGzj7DQ
— Surya Reddy (@jsuryareddy) July 2, 2025
இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.