அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையானது சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரியில் இன்று காலை திடீரென்று கடல் உள்வாங்கியது.

இதன் காரணமாக கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சில மணி நேரத்திற்கு பிறகு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கம் தான் என்று கூறப்படுகிறது.