உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் ஐஐடி பாபா என்பவர் மிகவும் பிரபலமானார். அதாவது மும்பையில் உள்ள ஐஐடி விண்வெளி பொறியியல் துறையில் அபய் சிங் என்பவர் பட்டம் பெற்ற நிலையில்  திடீரென துறவறம் மேற்கொண்டு மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள ஐஐடி பாபா என மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் ஜெய்ப்பூரை அடுத்த ரித்தி சித்தி என்ற பகுதியில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது. அங்கு ஐஐடி பாபா தங்கியிருந்த நிலையில் அவர் கஞ்சா வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் அவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்ததால் அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து பேசிய ஐஐடி பாபா கும்பமேளாவில் கலந்து கொண்ட அனைத்து சித்தர்களுமே கஞ்சாவை பிரசாதமாக எடுத்துக் கொள்கிறார்கள், அப்படி என்றால் அவர்கள் அனைவரையுமே நீங்கள் கைது செய்வீர்களா என்று கேட்டார்.