
திரிபுராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிப்ரவரி 16-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இந்நிலையில் பி.ஜே.பி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதில் 5 ரூபாய்க்கு சமைத்த உணவு, ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் ஒவ்வொரு EWS குடும்பத்திற்கும் ரூபாய் 50,000 பத்திரம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி மற்றும் 50,000 சிறந்த கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்டவை அடங்கும்.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு இரண்டு இலவச எல்பிஜி சிலிண்டர்கள், தகுதியுள்ள நிலமற்ற குடிமக்கள் அனைவருக்கும் நிலப் பட்டாக்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் கட்சி உறுதியளித்தது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையானது “திரிபுரா ஜன்ஜதி பிகாஷ் யோஜனா” திட்டத்தையும் முன்மொழிகிறது, இதன் கீழ் ST குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் நிதியுதவியை அரசாங்கம் வழங்கும். பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் ஆய்வுகளை ஆராய்ச்சி செய்யவும், மேம்படுத்தவும் மற்றும் பாதுகாக்கவும், மகாராஜா பிர் பிக்ரம் மாணிக்யா பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை காந்தசேராவில் நிறுவுவதாக உறுதியளிக்கிறது.