
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து புதிய தமிழக கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி கூறியதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிற மாநில கட்சிகளுக்கு ஒரு முக்கியமான பாடமாகும். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சியினரும் கூட்டணி அமைத்து வெற்றி பெற முடியும் என்பதற்கு மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளே சிறந்த சான்றாகும்.
இதற்கான முன் யோசனையாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி அமைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற வாய்ப்பை ஏற்கனவே அளித்துவிட்டார். தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்ட, அனைத்து கட்சிகளும் ஓரணியாக கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் ஒன்றாக செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.