செய்தியாளரிடம் பேசிய தம்பிதுரை, நீட் தேர்வை கொண்டு வந்தது யாருன்னு உலகத்துக்கே தெரியும். 2010-ல  குலாம் நபி ஆசாத் அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது…  அன்றைய திமுக அங்கம் வகித்த போது,  காங்கிரஸ் கூட்டணியில் தான் நீட் எக்ஸாம் கொண்டுவரப்பட்டது. 2012இல் தேர்வும் நடத்தப்பட்டது. திமுக அங்கம் வைக்கின்ற ஆட்சியில் இருக்கும்போது நீட் தேர்வு நடத்தப்பட்டது. பிறகு கோர்ட்டில் வந்த தீர்ப்பு வேறு.

ஆனால் நீட் தேவையே நடத்தியது யாரு ? திமுக . 19 வருஷம் மத்திய அரசில அங்கம் வகிக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகம். வி.பி சிங் காலத்திலிருந்து  மத்திய அரசோடு இருந்தார்கள். கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்றதால் தான் இந்த பிரச்சனையே. இதை யார் கொண்டு வந்தார்கள் ?

இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்துல கல்வித்துறையை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு கொண்டு வந்ததன் காரணமாகத்தான் இந்த நிலைமை. 19 ஆண்டுகளாக திமுக என்ன செய்து கொண்டிருந்தது ? புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பலமுறை பேசியிருக்கிறார்கள்,  தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

அதேபோல தமிழை  இந்தியாவினுடைய ஆட்சியை மொழியாக கொண்டு வர வேண்டும் என்று முதலில் தீர்மானம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் 1993 ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள். தமிழகத்தின் உரிமையும், தமிழர்களின் உரிமைக்கு பாடுகின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திமுக கிடையாது.

திமுக அரசு நாடகமாடுகிறார்கள். இவர்கள் நீட் எக்ஸாமுக்கு தீர்வே காண முடியாது. மக்களை ஏமாற்றி, மாணவர்களை ஏமாற்றி,  வாக்குகளை பெற்றுவிட்டு, இப்போது நாடகமாடிக் கொண்டிருக்கும் இயக்கம் தான்  திராவிட முன்னேற்றக் கழகம். நாடகத்திற்கு பெயர் போனவர்கள். அவர்கள் குடும்பமே நாடகம் தான். கலை குடும்பம் என்று சொல்வார்கள்..  அங்கு எப்படியெல்லாம் செய்வார்கள் என்று தெரியும்.

இவர்கள் நீட் எக்ஸாம் உண்மையான தீர்வு காண வேண்டுமென்றால் ? இவர்கள் மத்திய அரசை அணுகி,  சட்டம் கொண்டு வர வேண்டும். இவர்கள் இங்கு ஆட்சியில் இருக்கிறாங்க. சும்மா தீர்மானம் போடுவது மட்டும் போதாது.  சட்டமன்றத்தில் பல தீர்மானங்கள் போடப்பட்டிருக்கின்றன.. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீட் தேர்வுக்கு ஒருமுறை விதிவிலக்கு வாங்கி இருக்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானங்களை போட்டு மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறார்.

முறைப்படி நாங்கள் முயற்சி செய்தோம், இன்றும் அனைத்திந்திய அண்ணா  திராவிட முன்னேற்ற கழகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது. நீட் தேர்வு கூடாது என்பது தான். எங்களுடைய நிலைப்பாடே  தவிர,  அதற்கு ஆதரவு கிடையாது ஆனால் இவர்கள் ஆட்சியில் இருந்து கொண்டு,  வேண்டுமென்றே நாங்கள் மாநாடு நடத்தபோது  நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றும்,  உண்ணாவிரதம் நடத்துவோம் என்று சொல்வதெல்லாம் வெறும் நாடகம் தான்.  திமுகவின் இந்த நாடகம் எடுபடாது என தெரிவித்தார்.