தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது மட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய புதிய திட்டங்களும் அடிக்கடி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை தொடங்கப்பட்டது.

இதற்காக மாநில அளவிற் ஒரு தலைமைச் செயலகமும் உள்ள நிலையில் இந்த துறை மூலமாக பல பெரும் கோவில்கள் பராமரிப்பது, கோவில்களுக்கு வருகின்ற நிதியை சரியாக பயன்படுத்துவது மற்றும் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட பல பணிகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வயது முதிர்ந்த மக்களுக்காக கோவில்கள் சார்பில் உண்டு மற்றும் உறைவிட காப்பகங்கள் திறக்கப்படும் என்றும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.