திருப்பதி ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரசாதம் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகம் முழுவதும் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் குறித்து விமர்சித்துள்ளார். அதாவது திருப்பதி கோவிலில் தயாரிக்கப்படும் லட்டு நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்துவதாக தனது புகாரின் தெரிவித்துள்ளார். அப்போது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் இந்த செயலுக்கு மிகவும் வெட்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

தற்போது எம்.பி சுப்பா ரெட்டி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது திருப்பதியின் புனிதம் மற்றும் நம்பிக்கை பற்றி மிகவும் மோசமான முறையில் பேசி உள்ளார். லட்டு தொடர்பான அவர் சொன்ன கருத்து தீங்கு விளைவிக்க கூடியது. எப்படிப்பட்ட ஒருவரும் இப்படி பேச மாட்டார். இதன் மூலம் அரசியல் ஆதாயத்திற்காக அவர் எந்த ஒரு எல்லைக்கும் செல்வார் என தெரியவந்துள்ளது. மேலும் பக்தர்களின் நம்பிக்கை வலுப்படுத்துவதற்காக நான் எனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று வருகிறேன். இதனை சந்திரபாபு நாயுடு செய்வாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.