
2023 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது மார்ச் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். எனவே இந்த மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் உங்களுக்கு முக்கிய வங்கி வேலைகள் பாதிக்கப்படலாம். எனவே இந்த மாதத்திற்கு உண்டான வங்கி விடுமுறை செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கியின் காலண்டரில் கொடுக்கப்பட்ட விடுமுறைகளைத் தவிர குறிப்பிட்ட மாநிலங்களுக்கு உண்டான அரசு விடுமுறைகளும் கணக்கில் உள்ளது.
எனவே மார்ச் 7, 8, 9, 22 மற்றும் 30 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை என தெரியவந்துள்ளது. அதுபோல மார்ச் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய நாட்களில் நான்கு ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையாக உள்ளது. மேலும் மார்ச் 11 மற்றும் 25 ஆகியவை சனிக்கிழமை விடுமுறை நாட்கள் ஆகும். எனவே உங்களது வங்கி வேலைகளை மனதில் வைத்துக்கொண்டு மேற்கொண்ட விடுமுறை நாட்களைத் தவிர மீதமுள்ள நாட்களில் முக்கிய வங்கி வேலைகளை செய்து விடுங்கள்.