இந்திய பாராளுமன்றத்தில் நேற்று இரு அவைகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் மக்களவை கேள்வி நேரத்தில் போலிப் பல்கலைக்கழகங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்வில் அவர் கூறியதாவது, இதுவரை இந்தியாவில் 12 போலிப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 12 பல்கலைக்கழகங்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் 21பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் அரசின் அங்கீகாரம் அற்ற பல்கலைக்கழகங்கள் ஆகும். இந்தப் பல்கலைக்கழகங்களின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாதவை. எனவே இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அரசு அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது.

ஏனெனில் கூட்டாட்சி குறித்து கேள்வி எழுப்புவர். இது மாதிரியான விழிப்புணர்வுகளை சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் எம்.பிக்கள் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்தியாவில் உள்ள 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வழுதாவூர் ரோடு திலாஸ் பேட்டையில் உள்ள ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன் என்ற நிறுவனமும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.