தேனியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர்  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும், இந்த வாலிபருக்கும்  இடையே காதல் ஏற்பட்டு, கடந்த மாதம் 28-ந்தேதி அந்த வாலிபர் தனது காதலியை தேனியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் தனது பெற்றோரிடம் கூறிய போது, அதிர்ச்ச்சியடைந்த அவர்கள் பின், திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

திருமணத்திற்காக பத்திரிகை அடித்து, ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வாலிபரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மகனின் விருப்பப்படி விடிந்தால் திருமணம் என்று இருந்தது. இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் நள்ளிரவில் மாயமாகியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின் தனது மகனுக்கு அவன் விரும்பிய பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்த நிலையில், வீட்டில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.1 லட்சம், காலியிடத்தின் பத்திரம் மற்றும் ஒரு காரையும் எடுத்து சென்று விட்டதாக புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.