
தொழில்நுட்பத்தை முட்டாளாகிய இளைஞரின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. google மேப்பை பயன்படுத்தி வழியே தெரியாத பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் கூகுள் மேப் மூலம் நாம் செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள மேம்பாலங்கள், போக்குவரத்து நெரிசல்கள், வாகன ஓட்டிகள் அறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள இளைஞர் ஒருவர் தொழில்நுட்பத்தை அசால்ட்டாக ஏமாற்றியுள்ளார். ஒரு காலியான தெருவில் 99 மொபைல் போன்களை ஒன்றாக எடுத்துச் சென்று இல்லாத போக்குவரத்து நெரிசலை தானாகவே உருவாக்கியுள்ளார். மொபைல் போனிலிருந்து சிக்னலை பெற்ற கூகுள் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதாக காண்பித்தது. தொழில்நுட்பத்தை முட்டாளாகிய இளைஞரின் செயல் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.