தைவானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. தைவானை அடிப்பணிய வைக்கும் வகையில் சீன போர் விமானங்கள், கடற்கரை கப்பல்கள்,  தைவான் தீவுக்கு அருகில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தைவான் உடன் வேறு எந்த நாடுகளும் உறவு வைக்கக் கூடாது என சீனா எச்சரித்து வரும் நிலையில் தைவானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அமெரிக்க நிறுவனங்கள் மீது சீன பொருளாதார தடை விதித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் தைவான் ராணுவத்திற்கு ரேடார்கள், ஹெலிகாப்டர்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கருவிகளை விற்பனை செய்ததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.