கர்நாடகாவில் கால்கெரே என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் பெண் ஒருவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது கணவனிடம் தொடர்பு கொண்டு பேசிய அவர், அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இரவு ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பல இடங்களில் தேடிய அவரது கணவர், வீட்டுக்கு திரும்பி அவருக்காக காத்திருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று ஏரி பகுதியில் நடந்து சென்ற ஒருவர், பெண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் நஜ்மா (28) என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறினர்.

வங்காளதேச நாட்டு சேர்ந்த அந்தப் பெண் இந்தியாவுக்குள் சட்டவிரோதமான வகையில் ஊடுருவியிருக்க கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால் அவருக்கான ஆவண சான்றிதழ் எதுவும் இல்லை, ஆனால் அவரது கணவரினிடம் ஆவணங்கள் உள்ளது. அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுடைய குடும்பம் 5 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருவதாக கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.