கர்நாடக மாநிலம் பெங்களூரில் கிரண், நவ்யஸ்ரீ(25) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நவ்யஸ்ரீ தனது தோழியான ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து தனது திருமண வாழ்க்கை குறித்து வருத்தமாக பேசியுள்ளார். இதனால் ஐஸ்வர்யா, தனது தோழியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஐஸ்வர்யா மற்றும் அவரது நண்பரான அணில் என்பவருடன் சென்று நவ்யஸ்ரீ வாழ்க்கை குறித்து பேசியுள்ளனர்.

அப்போது நவ்யஸ்ரீ தனது கணவர் மீது புகார் கொடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து இரவு உணவை முடித்த பிறகு அணில் வீட்டிற்கு புறப்பட்டதும், நவ்யஸ்ரீ மற்றும் ஐஸ்வர்யா ஆகிய 2 பேரும் வீட்டில் தங்கியுள்ளார். பின்பு காலையில் எழுந்து பார்த்தபோது, நவ்யஸ்ரீ இறந்து கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரியின் பேரில் வரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் கிரண் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.