
தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுகன்யா(31), ஜெயராஜ் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சுகன்யாவுக்கு சமூக வலைதளத்தின் மூலம் கோபி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி அன்று சுகன்யா, கோபியுடன் ஓடிச்சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து தனது மனைவியை காணவில்லை என்று ஜெயராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கணவனுக்கு தெரியாமல் சுகன்யா, கோபியுடன் ரகசியமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். மனைவியை எங்கு தேடியும் கிடைக்காததால் தவித்துப்போன ஜெயராஜ், கடந்த சில வாரங்களுக்கு பிறகு, மெட்சல் ஆக்ஸிஜன் பூங்கா அருகே தனது மனைவி, கோபியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பார்த்துள்ளார். உடனே பின் தொடர்ந்த அவர், இருவரையும் மடக்கி பிடிக்க முயன்ற போது கோபியும், சுகன்யாவும் பைக்கை விட்டுவிட்டு ஓடும் பேருந்தில் ஏறிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.