சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா கோயிலுக்கும் தான் அவங்க போய்கிட்டு இருக்காங்க. அது அவங்களோட விருப்பம், அதை நான் தடுக்க விரும்பல.  தடுக்க தேவையில்லை,  நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிகளே தவிர,  ஆன்மீகத்திற்கு எதிரியல்ல. கோவிலும் –  பக்தியும் அவரவர் உரிமை. அவரவர் விருப்பம். ஏராளமான கோவில் நுழைவு போராட்டங்களை நடத்தி,  வெகு மக்களோட வழிபாட்டு உரிமையை வாங்கி கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம். தலைவர் கலைஞர் அவர்களுடைய பராசக்தி டயலாக்,  தான் அவுங்களுக்கு பதில்.

கோவில்கள் கூடாது என்பதல்ல…  கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது. கோவில்களிலும்,  பத்தியையும் பாஜக தனது அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்குது. ஆன்மிகத்தை அரசியலில் மிகச் சரியாக பகுத்து பார்க்க தெரிந்த… பகுத்தறிவாளர்கள் தான் தமிழ்நாட்டு மக்கள். இந்த கோயிலை இடிச்சிட்டாங்க. அந்த கோயிலை இடிச்சிட்டாங்க.  அப்படின்னு வாட்ஸ் அப்ல பூகம்ப படங்களை போட்டு வதந்தி பரப்புறாங்க.

ஆனால் உண்மை என்ன ?ஆயிரம் கோயில்களின் குடமுழுக்கு விழா நடத்துன ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடலாச்சி. 5,000 கோடி ரூபாய் மதிப்பு பெறுகின்ற கோவில் சொத்துக்களை மீட் ஆட்சி தான் திராவிட மாடலாச்சி. யார் யார் கிட்ட இருந்து, எங்க எங்க இருந்து ? எந்த சொத்துக்கள் எல்லாம் மீட்கப்படுதுன்னு அறநிலைதுறை சார்பில் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டு இருக்காங்க. இதை சொல்லுவதெல்லாம் அவங்களுக்கு பிடிக்கல.

லைட் இருந்தா திருடனுக்கு தான் பிடிக்காது. கோவிலை முறையா பராமரிச்சா.. மதவெறியை தூண்டக்கூடிய…. குளிர்காய நினைக்கிற அந்த கும்பலுக்கு பிடிக்கல.  அதனால உண்மைகளை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.  நம்முடைய கருத்துக்களை தமிழை தாண்டி இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மற்ற மொழி பேசக்கூடிய சகோதர – சகோதரிகளிடம் எடுத்துச் சொல்வோம் என தெரிவித்தார்.