என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சகோதர, சகோதரிகளே… 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஒரு வாய்ப்பு. இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சி தனி மனிதனாக…. தனி தொண்டரா இங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நான் உங்களிடம் வைக்கக்கூடிய ஒரே ஒரு வேண்டுகோள். இந்த கட்சியினுடைய மாநில தலைவராக…. மக்கள் பிரதிநிதிகளை நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்று அன்போடு நான் வேண்டு கொள்கின்றேன்.

ஒரு மக்கள் பிரதிநிதி இருந்தால் ? உங்களுடைய சேவகன்… உங்களுக்காக வேலை செய்வான்…. ஆணாக இருந்தாலும்,  பெண்ணாக இருந்தாலும் உங்களுடைய சேவகன் மக்கள் பிரதிநிதி. 2024 நமக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு, மக்கள் பிரதிநிதியை  நீங்கள் உருவாக்கிக் கொடுத்து, உங்களுடைய முனேற்றதிற்கும்,  நாட்டினுடைய முனேற்றதிற்கும் முழுவதுமாக அவர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வந்திருக்கக்கூடிய திட்டங்களை சொல்லாமல் இங்கிருந்து போக முடியாது. நேரமாகி இருந்தாலும் கூட,  இந்தியாவில் இரண்டு இடத்துல டிபன்ஸ் காரிடார் கொடுத்தாங்க. அதில் ஒன்று நமக்கு தெரியும் தமிழகம். அதுல குறிப்பாக நம்ம ஊரு சூலூர் தொகுதியில மட்டுமே இரண்டு இடங்கள் பயன்பட்டு இருக்கிறது. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இருக்கக்கூடிய வாரப்பட்டி ஊராட்சி பயன்பட்டு இருக்கிறது… சூலூர் ஒன்றியத்தில் இருக்ககூடிய வாகாரம் பாளையத்தில் இந்த இரண்டு இடத்துலையும் இன்னைக்கு இராணுவ தள வாட உற்பத்தி தொழிற்சாலைகள் வர ஆரம்பித்துவிட்டது, இது பிரதமரின் கனவு.

25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல இருக்கனும்ன்னு.. இதற்க்கு  இருக்கக்கூடிய தலைவர்கள் தலைவர்கள் பெரிய முயற்சி எடுத்துக் இருக்கின்றார்கள். குறிப்பாக வானதி சீனிவாசன் அக்கா அவர்களின் பெயரை சொல்லணும். மேடையில் இருக்க கூடிய தலைவர் பெயரை எல்லாம் சொல்லணும். பெரும் முயற்சி எடுத்து இதை கொண்டு வந்து இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு கிராமமும் வளர வேண்டும். அங்கே டிபன்ஸ் காரிடர்   போக வேண்டும்;. அங்கே ராணுவ தளவாடங்களை  உற்பத்தி செய்ய வேண்டும். எல்லாம் நம்முடைய முயற்சி. ஆனால் இங்க இருக்கக்கூடிய ஆளும் கட்சி அதை பயன்படுத்துவதற்கு தயாராகவில்லை என தெரிவித்துள்ளார்.