
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானவேல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள டீ கடையின் அருகே குழந்தைகள் அணியும் வகையில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் ஒன்று கிடந்துள்ளது. உடனே அதனை எடுத்து அவர் வேலை பார்க்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த வளையல் மேலபூவாணி வடக்கு தெருவை சேர்ந்த முருகனின் மகன் ராஜாராம் என்பவர் உடையது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி சிறப்பு ஞானவேல் ராஜாராம் தவறவிட்ட தங்க வளையலை சட்டப்படி உறுதி செய்த பின் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நேர்மையான செயல்பாடு குறித்து மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் தகவல் அறிந்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை பாராட்டினார்.