தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவின் கர்னூலில் இன்று 102.92° ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை விமான நிலையத்தில் 99.86 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.