
நாக்பூரில் ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற போலீசாரை கேள்வி கேட்டதற்காக, அந்த அதிகாரி அவர் மீது கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞர், ஹெல்மெட் இல்லாமல் சென்ற போலீசாரை தைரியமாக எதிர்கொண்டு, “நீங்கள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை?” என்று கேட்கிறார்.
அதற்கு பதிலாக அந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி, இளைஞரை அருகில் வரச் சொல்லி இரண்டு தடவை அறைந்தது வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது. அதன் பின்னர், அந்த போலீசார் தமக்கு பல் வலி இருப்பதால் ஹெல்மெட் அணியவில்லை என கூறினார். மேலும், அவர், அந்த இளைஞர் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.
View this post on Instagram
ஆனால் வீடியோவில் எந்தவிதமான ஆபாச வார்த்தைகளும் பயன்படுத்தப்படாதது தெளிவாக இருக்கிறது. அதன்பின், அதிகாரி ஆனந்த் சிங் என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டவர் தனது ஹெல்மெட்டைப் போட்டுக்கொண்டு வாகனத்தில் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது. பலர், “ஒரு பொது மக்கள் பல் வலி காரணமாக ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் சிலர், “போலீசாரே சட்டத்தை மீறுகிறார்கள், ஹெல்மெட் அணியாமலும், போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும், செல்லக்கூடாத பாதையில் செல்வதும், சீட் பெல்ட் இல்லாமல் ஓட்டுவதும் வழக்கமான காட்சிகள் தான்” என தெரிவித்துள்ளனர்.