
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் புதிய தலைமை நிலைய குழு உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொள்வதற்காக பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, பாமகவில் ஏற்பட்ட குழப்பத்தால் கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை குழப்பத்தில் உள்ளனர்.
இது மாற வேண்டும். இவர்கள் இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தால் குழப்பம் தான் ஏற்படும். அவர்கள் இருவரும் அமர்ந்து மனம் விட்டு பேசினால் தான், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இருவரும் மாறி மாறி பொறுப்புகளை நியமிப்பதால் எந்த தீர்வும் கிடைக்காது. பாமக பழைய நிலைக்கு வரவேண்டும். இருவரும் ஒன்று சேர்ந்தால் மற்ற கட்சிகளுக்கு இதில் பேச இடம் இருக்காது என்று தெரிவித்தார்.