இயக்குநர் செல்வராகவன் தனது இரண்டாவது மனைவி கீதாஞ்சலியைப் பிரிந்துவிட்டதாக நீண்ட நாட்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து செல்வராகவனின் புகைப்படங்களை நீக்கினார்.

இந்நிலையில், செல்வராகவன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “வாழ்க்கையில் எது நடந்தாலும் அது கடவுளால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. 3 வருஷத்துக்கு முன்னாடி என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் என்னை ரொம்ப பாதிச்சது, என் கண்ணுல இருந்து தண்ணி கொட்டிக்கிட்டே இருந்தது” எனத் தனது வலிகளைப் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

கடந்த 2011-ம் ஆண்டு கீதாஞ்சலியை மணந்த செல்வராகவனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே நடிகை சோனியா அகர்வாலுடனான முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணமும் முறிவை நோக்கிச் செல்கிறதா? என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

“கடவுள் விதித்த கணக்கை யாராலும் மாற்ற முடியாது” என அவர் பேசியிருப்பது, தனது விவாகரத்தைத்தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாரோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.