மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான பூஜா ஜாதவ், தனது அப்பாவியான தோற்றத்தால் நம்பவைக்கும்படியானவராக இருந்தாலும், அவர் பின்னணி திருப்பங்கள் நிறைந்தவை. கடந்த ஜூன் 24ஆம் தேதி அவரது மாமியார் சுஷிலா தேவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாரால் விசாரிக்கப்படும் போது வெளியான உண்மைகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

அந்த விசாரணையில், பூஜா ஜாதவ் கடந்த 11 ஆண்டுகளில் பல பரபரப்பான சம்பவங்களின் மையமாக இருந்ததும், காதல், திருமணம், விவாகரத்து, புது உறவுகள், நிலக் கோரிக்கைகள் என பல பரிமாணங்களில் தந்திரமாக செயல்பட்டதும் தெரியவந்தது. பூஜா தனது முதல் கணவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவரை கொலை செய்ய முயற்சி செய்தார் என குற்றச்சாட்டு உள்ளது. அதில் உயிர் பிழைத்த கணவர் அவர்மீது வழக்குப் பதிவு செய்ததால் சிறை வாசம் அனுபவித்த பூஜா, ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றங்களைச் சுற்றும் வேளையில், கல்யாண் என்ற நபரை சந்தித்து புதிய உறவுக்குள் நுழைந்தார்.

கல்யாணுடன் 6 ஆண்டுகள் லிவ்-இன் உறவில் வாழ்ந்த பிறகு, அவர் சாலை விபத்தில் இறந்ததும் பூஜா தனிமையடைந்தார். பின்னர் கல்யாணின் சகோதரர் சந்தோஷ் சிங்கை மணந்து வாழ்ந்தார். அதுமட்டுமன்றி, பூஜா தனது மாமனாருடனும் தனி உறவில் ஈடுபட்டிருந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத்தொடர்ந்து, கல்யாணின் பெயரில் உள்ள 8 பிகா நிலத்தை விற்க முயற்சித்த பூஜா, அவரது மாமியார் சுஷிலா தேவி அதனை எதிர்த்ததால், அவரை வழியிலிருந்து விலக்க சதித் திட்டம் தீட்டினார். பூஜா, தனது சகோதரி காமினி மற்றும் காமினியின் காதலன் அனிலைப் பயன்படுத்தி, கடந்த ஜூன் 24 அன்று தனது மகளின் பிறந்த நாளுக்காக தந்தையும், கணவரையும் குவாலியருக்கு அழைத்துவிட்டு, ஜான்சியில் தனியாக இருந்த மாமியாரை கொலை செய்ய வைத்தார்.

மயக்க ஊசி கொடுத்து, கழுத்தை நெறித்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த நகைகள் ₹8 லட்சம் மதிப்பில் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த பரபரப்பான கொலை வழக்கில், போலீசார் பூஜா, காமினி, அனில் ஆகியோரையும் கைது செய்து, விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இத்தகைய தந்திரமும், நுண்ணறிவும் கலந்த கூட்டு குற்றம் சமூகத்தில் பரவலான கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது ஆசைகளுக்காக எவ்வளவு தூரம் சென்றுருக்கிறாள் என்பதற்கான அதிர்ச்சி தரும் உதாரணமாக இந்த வழக்கு அமைந்துள்ளது. தற்போது பூஜா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.