போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கால்பந்து விளையாட்டில் உலக அளவில் புகழ்பெற்ற நட்சத்திர விளையாட்டு வீரர். இவர் கால்பந்து விளையாட்டில் தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்டவர். மேலும் இவர் தனது அபார வேகம், இடைவிடாத சாட்கள் மூலம் கால்பந்து ஜாம்பவானாக வலம் வருகிறார்.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது பிரபல பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் அறிக்கையில், கடந்த மே 2024 முதல் மே 2025 வரை ரொனால்டோ 275 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பின்படி ரூபாய் 2,356 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா கிளப்பான அல் நாசருக்காக பிரதிநிதிப்படுத்த உள்ளார். அதற்கு சம்பளமாக கடந்த ஆண்டை விட 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிக வருமானத்தை பெற்றுள்ளார். அவர் முதலில் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது இவரது விளையாட்டு ஒப்புதல்கள் மற்றும் சமூக ஊடக பாலோவர்கள்.

தற்போது ரொனால்டவை சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்கள் 939 மில்லியன் ஆக உயர்ந்துள்ளனர். அவரது இந்த உயர்ந்த நிலைக்கு காரணம் வெறும் விளையாட்டு மட்டுமல்லாமல் உலக அளவில் பல பிரபலமான பிராண்டுகளின் விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும் மற்றும் தனது நிறுவனங்கள் முதல் ஜிம்கள் வரை வணிக ரீதியாக உலக விளையாட்டில் அவர் ஒரு ஈடு இணையற்ற விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார்.