சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரை பிரபலங்கள் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் போதைப் பொருள்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

அதனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சிக்கினர். தற்போது அந்தப் பட்டியலில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவரும் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்து வருபவர் இதுவரை திருமணம் ஆகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனிடையே காவல்துறையினர் அந்த முன்னணி நடிகை இடம் விசாரணை நடத்துவதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு போதை பொருள் விற்பனை செய்ததாக பிரதீப், கெவின் என்ற 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை விசாரிக்கும் போது அந்த முன்னணி நடிகை மட்டுமல்லாமல் தமிழ் திரை உலகில் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.