மேற்கு வங்காளத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் தனது கணவனிடம் குடும்ப செலவு, மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் கணவனின் கிட்னியை விற்க வற்புறுத்தி உள்ளார். இதனால் கணவனும் கிட்னியை விற்க சம்மதித்துள்ளார். அதன்படி அவர் தனது கிட்னியையும் விற்றுள்ளார். இதன் பிறகு ஆவது குடும்பத்தில் உள்ள  பணப்பிரச்சினை சரியாகும், ஏழ்மையை ஓரளவு குறைந்து விடும் என்றும், எதிர் காலத்தில் தன் மகளின் திருமணத்தை எளிதாக்கும் என்றும் நம்பினார். இதற்கிடையில் அவரது மனைவிக்கு பாரக்பூரில்  வசிக்கும் ரவிதாஸ் என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கம் நாளிடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் தனது கணவன் கிட்னியை விற்று சம்பாதித்த 10 லட்சம் ரூபாயுடன் கள்ளக்காதலனுடன் ஓடினார். இதுகுறித்து கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அந்தப் பெண் பாரக்கூரில் ரவி தாஸுடன் சேர்ந்து வாழ தொடங்கியதை அறிந்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், 10 வயது மகளை அழைத்துக் கொண்டு அந்த தம்பதியின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர்கள் கதவை திறக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து லேசாக கதவை திறந்த பெண் நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள் நான் விவாகரத்து கடிதம் அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு கதவை அடைத்தார். மாமியார், மாமனார், கணவன், பிள்ளை என அனைவரும் கெஞ்சியும் அப்பெண் வெளியில் கூட வரவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.