செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர்  கேட்டகேள்விக்கு சரியா பதில் குடுக்கணும்.  நீங்க 40 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர் தான் கொடுத்தீங்கன்னு நம்ம ஆளுநர் சொல்லும் பொழுது…  இல்லை நான் 400 பெயர் கொடுத்தோம் என பதில் அறிக்கை குடுங்க,  நாங்க படிக்கிறோம்… ஏத்துகிறோம். அதை விட்டுவிட்டு முழு நேரமாக ஆளுநரை திட்டுவதை மட்டுமே ஒரு வேலையாக வைத்திருக்கக் கூடிய டி.ஆர். பாலு அவர்கள்.

திமுகவின் உடைய எல்லா தலைவர்களும் இந்த நேரத்தில் மிக மிக வன்மையாக நான் கண்டிப்பத்தோடு மட்டுமல்லாமல்,  இந்தப் போக்கு மாற வேண்டும். எப்பொழுதுமே ஆளுநரை வம்புக்கு இழுப்பது…. ஆளுநரை தரைகுறைவாக  பேசுவது….  இந்தப் போக்கை திமுக நிச்சயமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற கருத்தையும்,  பத்திரிக்கையாளர் மூலமாக திமுக அரசுக்கு நான் முன் வைக்கின்றேன்.

நம்முடைய முண்டாசுக் கவிஞன் பாரதி. அவர்களைப் பற்றி பேசுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்துடைய தலைவர்களுக்கு பேச அருகதை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.  முண்டாசு கவிஞன் பாரதி அவர்களை பல காலமாக ஏத்துக்கல. 1960, 70, 80 காலத்தில் ஏத்துக்கல. அவரை முழுவதுமாக மறைப்பதற்கு முயற்சி எடுத்தார். பாரதியை ஒரு சாதிக்குள் அடைக்க பார்த்தாங்க. பாரதி உடைய சுதந்திர தாகம் மிக்க அந்தக் கவிதைகளை எல்லாம் இவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை என தெரிவித்தார்