செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நீட் தேர்வில் அம்மா இருந்தபொழுது ரெகுலேஷன் இருந்தது, ஓராண்டுக்கு விலக்கு பெற்றோம். எடப்பாடியார் காலத்தில் கடுமையா விலக்கு பெறுவதற்கான முயற்சி செய்தோம். அந்த வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியும். காங்கிரஸில் இருக்கக்கூடிய பா.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் அந்த வழக்கில் போய் வாதாடி, பேசுனதை காமிக்கிறேன் என்னுடைய யூட்யூப்ல இதுக்கு.

இனிமேல் தமிழகத்தில் நீட்டை யாராலும் தடுக்க முடியாது. நான் அதற்கான உத்தரவு வாங்கிட்டேன்னு பெருமையோடு உச்ச நீதிமன்றத்தில் வாசப்படியில் நின்னு பேட்டி கொடுத்தாங்க…  அதுக்கப்புறம் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட்டை இங்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கு.

அதிமுக தான் நீட்டை அனுமதிச்சது, நீட் விலக்கு பெற ADMK ஆட்சியில் ஒன்றும் செய்யல  என்ற இந்த வாதம் என்பது மக்களிடத்திலே முழு பூசணிக்காயை சோற்றிலே மறைப்பதற்கு உண்டான ஒரு மிகப்பெரிய அரசியல் நாடகம். இது DMK அரசியல் ஆதாயம்பெறுவதற்கான நிகழ்வு.  தங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை மக்கள் நினைத்து பார்ப்பார்கள்  என்று தப்பிப்பதற்கான முயற்சியாக நான் பார்க்கிறேன் என தெரிவித்தார்.