ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமு மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் துர்கா பூஜையில் கலந்து கொண்டனர். அதன் பிறகு சிறுமிகள் வீடு திரும்பிய போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சிறுமிகளை வழி மறைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சிறுமிகள் தப்பித்து வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.

முதலில் பஞ்சாயத்து அளவில் இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு சரியான தீர்வு எட்டப்படாததால் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் கைது செய்தனர். அதில் ஒருவர் கிராம தலைவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.