மலேசியா கோலாலம்பூரில் ஷா ஆலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆசையாக தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளார். இதனால் ஷா தனது மகனுக்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார். பள்ளிக்கு செல்லும்போது உதவியாக இருக்கும். தனது மகன் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி கொள்வான் என ஷா நினைத்தார். ஆனால் அவரது மகன் மோட்டார் சைக்கிள் மூலம் பந்தய போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் வீட்டிற்கு தாமதமாக வந்ததால் ஷா தனது மகனை நினைத்து வருத்தப்பட்டார். இதனால் பலமுறை தனது மகனுக்கு அறிவுரை கூறி அவரை திருத்த முயன்றார். ஆனால் அதனை ஷா ஆலனின் மகன் கண்டு கொள்ளவில்லை. இதனால் தனது மகனுக்கு பாடம் புகட்ட ஷா ஆலம் தான் ஆசையாக வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளை அவரே தீ வைத்து எரித்து வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SAYS (@saysdotcom)