
மகாராஷ்டிரா மாநில மும்பையில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன் 3 பேர் காரில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் சாப்பிட்ட பிறகு பணம் கொடுப்பதற்காக க்யூ ஆர் கோடு ஸ்கேனரை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அதன்படி ஊழியரும் அதனை எடுத்து வருவதற்காக சென்றார். அதற்குள் 3 பேரும் நைசாக அங்கிருந்து காரில் கிளம்பினர். அதற்குள் ஊழியர் அவர்கள் காரின் அருகே சென்று பணம் தரும்படி கேட்டுள்ளார். அவர்கள் காரில் ஏறுவதை தடுத்து பில்லுக்கு பணம் கேட்டதால் கோபத்தில் காரின் ஜன்னல் வழியாக அவரின் கையைப் பிடித்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.
அதன் பின் காரை நிறுத்தி அவர்கள் அந்த ஊழியரை அடித்து கொடூரமாக துன்புறுத்தியதோடு அவரிடம் இருந்த 11,500 ரொக்க பணத்தை திருடினர். அதோடு மட்டுமின்றி அவரின் கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குள்ளையே அந்த நபரை வைத்துள்ளனர். அதன் பிறகு தான் ஊழியரை வெளியே அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மூவரை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
जेवणाचे बिल मागितल्याच्या रागातून वेटरचे अपहरण; भरधाव गाडीत एक किलोमीटरपर्यंत नेले फरफटत #beednews #crimenews pic.twitter.com/cT4CgwFcRm
— Lokmat Chhatrapati Sambhajinagar (@milokmatabd) September 9, 2024