தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  மோடி அவர்களை பத்தி  நல்லதெல்லாம் பேசிட்டோம். ஆனால் திமுகவை பத்தி  பேசாம போனா  நீங்க  விட மாட்டீங்க. கன்னியாகுமரியில்   ஒரு அமைச்சர் இருக்காரு. அமைச்சர் பெயர் உங்களுக்கு தெரியும், மனோ தங்கராஜ். அவர பத்தி நல்லா தெரியும். பிரதமர் அவர்கள் புதிய பாராளுமன்றத்தைக் கட்டி,  தமிழகத்தினுடைய அடையாளமாக…

தமிழக  கலாச்சாரத்தினுடைய  அடையாளமாக….  இருக்கக்கூடிய செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைத்து அழகு பார்க்கின்றார், பெருமைப்படுத்துறார். இந்த மனுஷன் ஒரு பதிவு போட்டு இருந்தாரு. நீங்க எல்லாம் பார்த்திருப்பீங்க…  மோடி அவர்கள்,  பாராளுமன்றத்தின்  முன்பு  சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குறாங்க. அந்த பதிவு போட்டுட்டு மனோ தங்கராஜ் அவர்கள் கேக்குறாங்க. மூச்சி இருக்கா ? உயிர் இருக்கான்னு…

ஐயா உண்மைய சொல்லனும்னா….  இவரையெல்லாம் கட்டி கடல்ல  போட்டா கூட உள்ள போக  மாட்டாரு. கடலே  ஏத்துக்காது. கயித்துல  கட்டி கடல்ல  போட்டீங்கன்னா. கடலே  ஏத்துக்காது, அப்படிப்பட்ட மனிதர். அப்படிப்பட்ட கொடூர உள்ளம் இருக்கக்கூடியவர்.

தர்மராஜ் அண்ணே சொன்னாரு…..  அண்ணே ஒரு அரை நாள் நீங்க கண்டும் –  காணாம  இருந்துக்கோங்க நாங்க பாத்துக்கிறோம் கன்னியாகுமரிலே…..  இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய தலைவர்களையும்,  தொண்டர்களையும் கட்டுப்படுத்துவது பெரிய பாடா போச்சு .. அதாவது மனோ தங்கராஜ் அவர்களுக்கு….  ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் மோடி அவர்களுடைய காலில் இருக்கக்கூடிய….  மோடி அவர்கள் காலில்  இருக்கக்கூடிய நகத்தில் இருக்கக்கூடிய அழுக்குக்கு கூட நீங்க தகுதி அல்ல என தெரிவித்தார்.